கமலஹாசனும் எஸ்பி பாலசுப்ரமணியனும் தொலைக்காட்சியில் பாடிக்கொண்டிருக்கிறார்கள். முகம் தெரியாதவர்களின் கைதட்டல் ஒலித்து ஓய்கிறது.ஏக் துஜே கேலியேவில் ஒரு சோகப்பாடல்.கண்கலங்குகிறது.
ஒருமுறை வெயில்காலத்தில் வடபழனி பேருந்துநிலையத்தில் கேட்ட பாடலைப்பாடியவர் கண்தெரியாத ஒரு பெண்.'கண்கள் இரண்டும்' என்று உன்னைக்கண்டு பேசுமோ'என்று கீச்சுக்குரலில் துவங்கும் பழைய பாடல்.சில்லறை கொடுக்கலாம் என்று எடுத்துக் கையில் வைத்திருந்தேன்.பேருந்து கிளம்பும் நேரம்வர நடத்துனர் விரட்ட பாதிப் பாடலுடன் அவள் இறங்கி வெயிலில் நடந்துபோனாள்.கண்கலங்கியது.
ஒரு பிறந்தநாள் பார்ட்டியில் நல்ல குடிபோதையில் நண்பர் பாடிய 'உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது.'.என்று பாடத்துவங்கி பாதியில் அழுதார்.ஏனோ கண் கலங்கியது.
ஊரிலிருக்கும் அப்பாவிடம் எனது பையன் பாட்டுப்பாடு என்று கேட்க அவர் நான் சின்னவனாகத் தூளியில் இருக்கையில் பாடியதாக சிங்காரப்புன்னகை கண்ணாரக்கண்டாலே..என்று குரலுடைந்து பாடினார். கண்கள் கலங்கி வழிந்தன. பயணத்தில் சிலநேரம். தூக்கம் வராத இரவுகளில் எப்போதாவது. அழவைக்கும் பாடல்கள் உங்களிடமும் இருக்கிறதா நண்ப.
Subscribe to:
Post Comments (Atom)

2 comments:
சில பாடல்களைக் கேட்டால் நம்மை உருகவைக்கும்தான் . ஆனால் பாடல்களைப் பற்றி எழுதினாலே உருக வைக்க முடியும் என்று காட்டியிருக்கிறது உங்கள் எழுத்து .
வாழ்த்துக்கள்.
சுகா
Hi Cheziyan,
I hope you are the one who wrote "வந்த நாள் முதல்" from Vikatan.
It was very nice.
Regards,
Manikandan Krishnan
Post a Comment